அதிபருக்கான ரூ.400 கோடி விமானம். ஆர்டரை ரத்து செய்ய டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபருக்காக அதிநவீன விமானம் ஒன்று ரூ.400 கோடிக்கு ஆர்ட்ர் செய்ததை ரத்து செய்து டிரம்ப் உத்தரவு இட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வரும் ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் பழையதாகிவிட்டதால் அதிபரின் உபயோகத்திற்கு என ரூ.400 கோடி மதிப்பில் புதிய அதிநவீனரக 747 ரக ஜம்போ ஜெட் விமானம் வாங்க அமெரிக்க அரசு தீர்மானித்தது.
இதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு ‘போயிங்’ நிறுவனத்துக்கு ரூ.400 கோடி மதிப்பில் விமானம் ஒன்று ஆர்டர் செய்யப்பட்டது. இந்த விமானம் வரும் 2024ஆம் ஆண்டு டெலிவரி செய்யப்படும். இந்நிலையில் இந்த விமானத்துக்கான ஆர்டரை ரத்து செய்வதாக அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
‘போயிங் நிறுவனம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால், இவ்வளவு பெரிய லாபம் சம்பாதிக்க நினைக்க கூடாது. எனவே, இந்த ஆர்டரை ரத்து செய்கிறோம்.
அமெரிக்க விமானப்படைக்கு விமானங்களை தயாரிக்கும் அரசு நிறுவனமே அதிபர் பயணிக்கும் சிறப்பு விமானத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கும். இதன்மூலம் அரசுக்கு வரி செலுத்தும் மக்களின் பணம் மீதப்பட்டுத்தப்படும்’ என டிரம்ப் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.