தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டம். கட்சியின் தலைவராக ஜி.கே. வாசன் ஒருமனதாக தேர்வு.

tmcகடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் தமாகவுக்கு உயிர் கொடுத்த ஜி.கே.வாசன் நேற்று அக்கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமாகா கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முதல் வேலையாக அக்கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டார். தலைவர் பதவிக்கு ஜி.கே.வாசனை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் முன்மொழிந்தார். அவரைத் தொடர்ந்து பாரமலை, பீட்டர் அல்போன்ஸ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வழிமொழிந்தனர்.

தலைவர் பதவிக்கு ஜி.கே.வாசனை எதிர்த்து யாரும் போட்டியிட முன் வராததால் ஜி.கே.வாசன் போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஞானதேசிகன் அறிவித்தார். பின்னர் புதிய தலைவருக்கு கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினர்.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் பேசியபோது 2016-இல் தமாகா தலைமையில் ஆட்சி அமையும் என்றும் ஜி.கே.வாசனை தமிழக முதல்வராக அமர்த்த வேண்டும் என்றனர். மேலும் பிரதமராகும் வாய்ப்பு மூப்பனாருக்கு தவறிப் போயிருக்கலாம். ஆனால், ஜி.கே.வாசன் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

பின்னர் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட நிர்வாகிகளை நியமனம் செய்ய ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது என்றும் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்தள்ளது. தேச விரோத எண்ணத்துடன் அரசியல் செய்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஞானதேசிகன் பேசினார்.

தமிழகத்தில் தொழில் வளம் பெருக தொடர் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply