மக்கள் நலக்கூட்டணியில் இணைகிறார் ஜி.கே.வாசன்

மக்கள் நலக்கூட்டணியில் இணைகிறார் ஜி.கே.வாசன்

makkalஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக பேசி வந்தது. ஆனால் அதிமுக கூட்டணியில் இணைய ஜெயலலிதா விதித்த ஒருசில நிபந்தனைகளை ஜி.கே.வாசன் ஏற்றுக்கொள்ளாததால் அதிமுகவில் தமாக இணையவில்லை. இந்நிலையில் தற்போது மக்கள் நலக்கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று விஜயகாந்த், வைகோ உள்பட மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை ஜி.கே.வாசன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் மக்கள் நலக்கூட்டணியில் தமாகவுக்கு எத்தனை இடம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்

மேலும் மக்கள் நலக்கூட்டணியில் இன்று தமாக இணைந்தால் நாளை நடைபெறும் மாமண்டூர் கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்வார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

7 சீட்டுக்கள் மட்டுமே கொடுக்க முடியும், அதுவும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அதிமுகவும், தமாகவை கண்டிப்பாக சேர்க்ககூடாது என சோனியா விதித்த கண்டிஷன் காரணமாக திமுகவும் மாறி மாறி தமாகவை புறக்கணித்துவிட்டது. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் தமாகவுக்கு இடம் கிடைத்துள்ளது அக்கட்சியினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply