அதிமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி. ஜி.கே.வாசன் முயற்சி பலிக்குமா?

அதிமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி. ஜி.கே.வாசன் முயற்சி பலிக்குமா?

vasanகடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட ஜி.கே.வாசனின் தமிழ் மாநில கட்சி தற்போது தனது பாதையை மாற்றி ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதிமுக, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை அமைத்து அந்த கூட்டணி மூலம் வரும் உள்ளாட்சி தேர்தல் முதல் அனைத்து தேர்தலையும் சந்திக்க வாசன் முடிவு செய்துள்ளதாக தமாக புள்ளிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக வாசன் மு.க.ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளின் கூட்டணி தேவையில்லை என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றதில் இருந்தே நிரூபணம் ஆனது.

எனவே தேசியக் கட்சிகளின் தயவு அவசியம்’ என்ற எண்ணம் தற்போது திமுகவுக்கும் ஏற்ப்ட்டுள்ளது. இதை முன்வைத்து வரக் கூடிய தேர்தல்களில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை அளிப்பதைவிட, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் போட்டியிடுவதையே தி.மு.க விரும்புவதாகவும், காங்கிரஸை தவிர்த்து மாநிலக் கட்சிகளின் அணி உதயமானால், அதில் தமாக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளும் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அந்த நேரத்தில், இந்த அணியே மாபெரும் வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்கும். அதற்கு முன்னோட்டமாகத்தான் ஸ்டாலினுடன் சமீபத்தில் வாசன் சந்தித்ததாகவும் விரைவில் வாசன் அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணியை உறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறாது.

ஆனால் இந்த கூட்டணியை மக்கள் ஆதரிப்பாளர்களா? அதிமுகவுக்கு மாற்றாக இந்த கூட்டணியை தேர்வு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply