பாண்டியராஜின் கேடி 2-ல் ஜி.வி.பிரகாஷ்

பாண்டியராஜின் கேடி 2-ல் ஜி.வி.பிரகாஷ்
g.v.prakash
‘பசங்க’ பாண்டியராஜ் இயக்கிய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று கூறப்படும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. விமல், சிவகார்த்திகேயன், ரெஜினா, பிந்துமாதவி நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பாண்டியராஜ் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்களான விமல், மற்றும் சிவகார்த்திகேயன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க  ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், பாண்டியராஜ் இயக்கும் அடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாண்டிராஜ் ஏற்கனவே இயக்கி முடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply