விஜய்க்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த சிறப்பு போனஸ்
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஏழு பாடல்களும் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த ஏழு பாடல்களை தவிர போனஸாக ஒரு சிறிய பாடலை ஜி.வி.பிரகாஷ் கடைசி நேரத்தில் ரிகார்டிங் செய்துள்ளதாகவும், இந்த பாடல் கிளைமாக்ஸூக்கு பின்னர் படத்தில் இடம் பெறுவதாகவும் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தெறி’ படத்தின் பின்னணி இசை பணிகளை முழுவதுமாக முடித்து தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் இந்த படம் தற்போது ரிலீஸுக்கு 100% தயாராகிவிட்டதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ‘தெறி’ படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.