“மனைவியின் அன்புக்கட்டளை” நிறைவேற்றிய ஜி.வி.பிரகாஷ்

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் பென்சில். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த  ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார்.  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இயக்குனர் மணி நாகராஜ் சொன்னார்
வாழ்க்கை முழுவதும் கூடவே பென்சில் வந்தாலும் பள்ளி பருவத்துக்கு பிறகு அதற்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை. இதை மையப்படுத்திதான் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஸ்டில்களை பார்த்துவிட்டு சிலர், இது பள்ளி மாணவர்களின் காதல் படம் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை.  அந்த வயதிற்கே உரிய சின்ன ஈர்ப்பைத்தான் காட்டுகிறேன். மற்றபடி இது த்ரில்லர் படம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று நிகழ்கிறது. அதை அவர்கள் எப்படி சமாளித்து வெளியே வருகிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
தொடர்ந்து பேசிய ஜி.வி.பிரகாஷ் நட்புக்காக இந்தப்படத்தில் தான் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக சொன்னார். தன்னுடைய மனைவிக்கு தான் நடிப்பதில் சம்மதம். அதே நேரத்தில் கதாநாயகியை தொடாமல் நடிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு இருப்பதாக சொன்னார். தான் தோல் பொலிவு பெற சிகிச்சை ஒன்றை எடுத்துக்கொண்டு இருப்பதால் தன்னை புகைப்படம் எடுக்கவோ வீடியோ எடுக்கவோ அவர் சம்மதிக்கவில்லை.

Leave a Reply