10 லட்சம் சாம்சங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெற அமெரிக்கா உத்தரவு
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போன்கள் திடீர் திடீரென வெடித்ததாக வந்த புகாரை அடுத்து இந்தியர் ஏர்லைன்ஸ் உள்பட பல விமான நிறுவனங்கள் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போன்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்துள்ளன. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போன்களை பல நாடுகளில் திரும்ப பெற்று வரும் நிலையில் தற்போது அமெரிக்காவில் 10 லட்சம் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப்பெற வேண்டும் என அமெரிக்க நுகர்வோர் பொருள்கள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அமெரிக்கா நிறுவனத்தின் தலைவர் டிம் பாக்ஸ்டர் கூறியதாவது: அமெரிக்க வாடிக்கையாளர்களிகளிடமிருந்து கேலக்ஸி நோட்-7 செல்லிடப்பேசிகள் விரைவாகத் திரும்பப் பெறப்பட உள்ளன. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அவற்றைத் திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரச்னைக்குரிய கேலக்ஸி நோட்-7 செல்லிடப்பேசிகளைக் கொடுத்து அதற்கு பதிலாகப் புதிய செல்லிடப்பேசியை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். புதிய செல்லிடப்பேசியைப் பெற விரும்பாதவர்களுக்குப் பணம் திருப்பித் தரப்படும் என்று கூறியுள்ளார்.