காந்தின் கை ராட்டை லண்டனில் நேற்று ஏலம்

லண்டனில் உள்ள புகழ்பெற்ற முல்லக் ஏல நிறுவனத்தில் அபூர்வமான 516 பொருட்கள் நேற்று ஏலம் விடப்பட்டன. இதில், 246 பொருட்கள் இந்தியர்கள் பயன்படுத்தியவை. இவற்றில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள எரவாடா சிறையில் மகாத்மா காந்தி அடைக்கப்பட்டு இருந்தபோது, அவர் பயன்படுத்திய கை ராட்டை மிகவும் முக்கியமானது.

இந்த கையடக்க ராட்டையை அப்போதைய ஆங்கிலேய அதிகாரியான ப்ளாயிட் பபர் என்பவருக்கு காந்தி பரிசாக கொடுத்தார். 80 ஆண்டுகள் பழமையான இந்த அரிய பொக்கிஷம் இப்போது ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.11 கோடி கிடைத்தது. இதை இந்தியர் ஒருவரே ஏலம் எடுத்தார்.

Leave a Reply