மகாத்மா காந்தியின் உபதேசங்கள் அனைத்தும் முட்டாள்தனமானது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

katjuசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து அதன்பின்னர் சுப்ரீம் கோர்ட்நீதிபதியாகி ஓய்வு பெற்றவர் மார்க்கண்டேய கட்ஜூ. ஓய்வு பெற்ற பின்னர் இவர் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளன.

டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது கிரண்பேடியை விட சாஷியா இல்மி மிகவும் அழகானவர். அவரை முதல்வர் வேட்பாளாராக பாஜக அறிவித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்றும், , தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் எனவும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியை ஒரு பிரிட்டிஷ் உளவாளி என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பிளாக்கில், ”இந்த பதிவு எனக்கு பெரிய தொல்லைகளையும், எதிர்ப்புகளையும் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் புகழ் தேடுபவனும் அல்ல. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் எனக்கு பல கண்டனங்களும் வருகிறது. இருப்பினும் நாட்டின் நலன் கருதியே நான் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.

மகாத்மா காந்தி ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டாக இருந்தார். மதத்தையும் அரசியலில் புகுத்தி இந்தியாவிற்கு மிகபெரிய தீங்கை செய்து உள்ளார். மேலும், பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்நிலையையும் அவர் முன்னெடுத்து சென்றுள்ளார்.

மகாத்மா காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிரானவர். இந்த முட்டாள்தனத்தால் கை நூற்பு இராட்டை அவர் போதித்தார். இதுபோல் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது. இது மக்களை ஏமாற்றும் செயல்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply