விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி

Garbine-Muguruzபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை முருகுஜா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 124வது நிலையில் உள்ள சுலோவக்கியாவின் ஜானா செபெலோ, முருகுஜாவை 58 நிமிடத்திற்குள் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் முருகுஜாவை தோற்கடித்தார். இந்த தோல்வி காரணமாக முருகுஜா 2-வது சுற்றோடு போட்டியில் இருந்து வெளியேறுகிறார்.

இந்த வெற்றி குறித்து 23 வயதான செபெலோவா கூறியபோது, `இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் இன்று சிறப்பாக ஆடினேன். வெற்றிக்கு நான் தகுதியானவள். ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கு முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இருந்தேன். விம்பிள்டனில் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு’ என்று கூறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி பிரான்சின் ஜுலியன் பென்னட்டுவை தோற்கடித்தார். கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த இத்தாலியின் ஆன்ட்ரீஸ் செப்பியை 7-6 (5), 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 2 மணி நேரத்திற்குள் செப்பியின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த ராவ்னிக் 25 ஏஸ் சர்வீஸ்களை போட்டு அட்டகாசப்படுத்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் யென் ஹூசுன் லுவை (சீனத்தைபே) எளிதில் வீழ்த்தினார்.

Leave a Reply