தேவையான பொருட்கள்
இறால் – ½ டீஸ்பூன்
சோள மாவு – 1 டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
முட்டை – ½
மைதா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
மிளகாய் விழுது – 1 டீஸ்பூன்
தக்காளி காய் – 1 ½ டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தி வைத்துள்ள இறால், மிளகு தூள், உப்பு, முட்டை கரு, மைதா, சோள மாவு இவை அனைத்தும் கலந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் விழுது, தேவையான அளவு தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின், வறுத்து வைத்துள்ள இறால், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு பரிமாறவும்
குறிப்பு
சப்பாத்தி, சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுக்குப் இணை உணவாக இது பொருந்தும்.