கருடனும் பறப்பதில்லை பல்லியும் ஒலிப்பதில்லை ஏன் ?

th_9dfb385cccb5f748bcaf8e3170623ebe_1364198828TheKillஇராமர் இராவணனை வதம் செய்த பிறகு சேதுவில்சிவபூஜை செய்வதற்காக அனுமனை காசியில் சென்று சிவலிங்கம்கொண்டுவரும்படி கோரினார்.

அனுமன் காசியை அடைந்து பார்த்தார். அங்கு பல விதமானலிங்கங்கள் காணப்பட்டன. இதில் எது சிவலிங்கம் எதுசுயம்புலிங்கம் என்று அறியாது விழித்தார். அப்போது ஒருசிவலிங்கத்திற்கு மேலே வானில் கருடன் வட்டமிட்டான். பல்லியும்நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளால் அது சுயம்புலிங்கம்என்றறிந்த அனுமன் அந்த சுயம்புலிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றா ர்.

காசியின் காவலராகிய கால பைரவர் அது கண்டுகோபித்தார். என் அனுமதியின்றி நீ எப்படி சிவலிங்கத்தைஎடுக்கலாம் என்று கூறி அனுமனை தடுத்தார்.

பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் சண்டை நடந்தது.அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காகஇந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும் என்றுவேண்டினார்கள்.

பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைகொடுத்தனுப்பினார். ஆனால் தன் அனுமதியின்றி லிங்கத்தைஎடுக்கமுயன்ற அனுமருக்கு துணை புரிந்த கருடன் காசிஎல்லைக்கள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில்இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் சாபமிட்டார்.

பைரவரின் சாபத்தின் படி இன்றும் காசி மாநகரில் கருடன்பறப்பதில்லை,பல்லி ஒலிப்பதில்லை.இது ஒரு அதிசயம் தான்.

Leave a Reply