நச்சுவாயு தாக்குதல். சிரியாவில் 58 பேர் பரிதாப பலி

நச்சுவாயு தாக்குதல். சிரியாவில் 58 பேர் பரிதாப பலி

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சிரியாவில் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் 58 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் கான் ஷெய்குன் பகுதியில் இன்று வான் வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது போர் விமானங்களில் இருந்து நச்சு வாயுக்கள் ஏவப்பட்டுள்ளன. அந்த சம்பவத்தில் ஏராளமான பொதுமக்கள் பலியானதாகவும், சிலருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர். நச்சு வாயுக்களில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் குறித்து சரியாக தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். பெல்ஜியம் நாட்டின் பிரச்சல்ஸ் நகரில் ‘சிரியாவின் எதிர்காலம்’ என்ற பெயரில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த நிலையில் சிரியாவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியதாக கருதப்படுகிறது. இதற்கிடையில் அங்குள்ள பொதுமக்களுக்கு மயக்கம், வாந்தி, வாயில் நுரை உள்ளிட்டவை ஏற்படுத்துவதாக கான் ஷெய்குன் நகரில் உள்ள மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும், அவர்களில் 9 குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லிப் மாகாணத்தின் பெரும்பகுதி ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவர்களை அழிக்கும் வகையில், ரஷ்ய போர் விமானங்கள், அமெரிக்க கூட்டுப்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply