டெல்லி பள்ளியில் திடீர் வாயு கசிவு. 100 குழந்தைகள் கதி என்ன?
டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சர்வோதயா கன்யா வித்யாலாயா என்ற பள்ளியில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவு காரணமாக அந்த பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த 110 பள்ளிக்குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
டெல்லியில் துக்லக்பாத் பகுதியில், விடுதியுடன் கூடிய ராணி ஜான்சி சர்வோதயா கன்யா வித்யாலாயா பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு வைத்திருந்த கெமிக்கல் கண்டெய்னர் ஒன்றில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக விடுதியில் இருந்த 110 குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் அதனால் அவர்களில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பாதுகாப்பு கருதி மற்ற மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.