இன்ஜினியரிங் துறையில் நிதியுதவி பெற்று மேற்படிப்பைத் தொடர மற்றும் பி.எச்டி, அறிவியல் படிப்புகளுக்கு உதவித் தொகை பெற கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோர்ஸ்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படும் போது குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் அவர்கள் கேட் தேர்வில் பெற்ற ரேங்கின் அடிப்படையிலும் மீதியுள்ள 30 சதவீத மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் வைக்கப்படும் தேர்வு, நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கப்படுவார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்காகவும் கேட் தேர்வை பயன்படுத்துகின்றன. 2014ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ம் தேதி முதல் கேட் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநி லத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு சென்னை ஐஐடி நிறுவனத்தை அணுக வேண்டும்.
அதன் இணையதள முகவரி: www.iitm.ac.in.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள்: 1.10.2013.
கேட் தேர்வு நடைபெறும் நாட்கள்: 1.2.2014 மற்றும் 2.2.2014.