கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்தில் கதாநாயகனுக்கு சமமாக இன்னொரு வேடம் இருக்கின்றதாம். மங்காத்தா படத்தில் அர்ஜூன் நடித்த கேரக்டர் போல இந்த கேரக்டரும் அஜீத் வேடத்திற்கு ஈடு கொடுக்கும் வேடமாம். முதலில் இந்த இரண்டு கேரக்டர்களிலும் அஜீத்தே நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கவுதம் மேனன் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கவில்லை என்றும், படத்தில் இன்னொரு முக்கிய நடிகர் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த முக்கிய வேடத்திற்கு சரத்குமார், ஆதி, விஷால் ஆகியோர்கள் பரிசீலனையில் உள்ளனர். விஷால் ஏற்கனவே மூன்று படங்களில் பிசியாக இருப்பதால் அவருடைய கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். எனவே சரத்குமார் அல்லது ஆதி நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார் ஏற்கனவே கவுதம் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடித்துள்ளதால் அவர் மீண்டும் கவுதம் மேனன் படத்தில் நடிக்கலாம் என கூறுகின்றனர்.
படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சரத்குமாருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கராத்தே வீரர் ஹுசைனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.