மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில் மீனா நடித்த கேரக்டரில் முதலில் மீனாவே நடிப்பதாவும், அதன்பின்னர் நதியா, அல்லது சிம்ரன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது கமல், மீனாவின் கேரக்டரில் நடிக்க கெளதமியை தேர்வு செய்துள்ளார்.
கமல்ஹாசனுடன் தற்போது துணையாக வாழ்ந்து வரும் கெளதமி, அந்த படத்தில் நடித்த மீனாவின் கேரக்டரை பார்த்து மிகவும் ஆர்வமானதால், அந்த கேரக்டரில் தன்னையே நடிக்க வைக்கும்படி கமலிடம் கேட்டதாகவும், அதற்கு கமல் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
த்ரிஷயம் தமிழ் ரீமேக் இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் கமல் இதுகுறித்து கலந்து பேசி கெளதமியே தனக்கு ஜோடியாக நடிக்க அனுமதி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரும். தற்போது கமல்ஹாசன் உத்தமவில்லன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார் என்பது அனைவரும் தெரிந்ததே.