உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கெய்ல் இரட்டை சதம் அடித்து எதிரணியை மிரட்டியுள்ளார்.
ஜிம்பாவேக்கு எதிரான இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டாவது பந்திலேயே ஸ்மித் தனது விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெய் அதிரடியாக விளையாடி 215 ரன்கள் விளாசியுள்ளார். 147 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் உதவியுடன் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய சாமுவே 133 ரன்கள் எடுத்துள்ளார். 156 பந்துகளில் 11 பவுண்டர்களும், 3 சிக்சர்களும் இவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 372 ரன்கள் குவித்துள்ளது. வெற்றி பெற 373 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை விரட்டி ஜிம்பாவே அணி 44.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வில்லியம்ஸ் 76 ரன்களும், எர்வின் 52 ரன்களும் எடுத்தனர். கிறிஸ்ட் கெய்ல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.