ஸ்டெர்லைட் ஆலையில் எனது லாரிகளா? நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதாஜீவன்

ஸ்டெர்லைட் ஆலையில் எனது லாரிகளா? நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதாஜீவன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கீதாஜீவன் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான லாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யபப்ட்டு செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டினை மறுத்த எம்.எல்.ஏ கீதாஜீவன், இந்த குற்றச்சாட்டை உறுதி செய்தால் பதவி விலக தயார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவல்களை கூறியிருக்கிறார். அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படியொரு அப்பட்டமான பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எதுவும் எடுக்கவில்லை.

என்னுடைய, எங்கள் குடும்பத்தினருடைய லாரிகள் எதுவும் அங்கு ஓடவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.வான என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியிருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்தை நிரூபித்தால் நான் பதவி விலக தயார். உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கீதாஜீவன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Leave a Reply