பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் தேதி: ஆணையம் அறிவிப்பு

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் தேதி: ஆணையம் அறிவிப்பு

பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமா் அப்பாஸி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெறுவதால் அந்நாட்டில் பொதுத்தோ்தல் நடத்தும் பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் சட்டப்படி ஒரு ஆட்சி காலம் முடிந்த பின்னர் 60 நாட்களுக்குள் அடுத்த தோ்தல் நடத்த வேண்டும். இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வரும் ஜூலை 25 முதல் 27ம் தேதிக்குள் தோ்தல் நடத்தலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஜூலை 25ம் தேதி பொதுத்தோ்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்பது யார் என்பது குறித்து அறிய பாகிஸ்தான் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Leave a Reply