ஹாலிவுட் அஜித்துக்கு பிறந்த இரட்டை குழந்தை

ஹாலிவுட் அஜித்துக்கு பிறந்த இரட்டை குழந்தை

தல அஜித் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘மங்காத்தா’ படத்திற்கு பின்னர் பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தான் இருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் அஜித்தை கோலிவுட்டின் ஜார்ஜ் குளூனி என்று அழைப்பதுண்டு.

ஹாலிவுட் திரையுலகில் சால்ட் அண்ட் பெப்பர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜார்ஜ் குளூனிதான். 56 வயதானாலும் இன்னும் இளைஞர் போல சுறுசுறுப்பாக நிஜ வாழ்விலும் திரைப்படங்களிலும் இருந்து வரும் ஜார்ஜ் குளூனிக்கு நேற்று இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜார்ஜ் குளூனி, அமல் குளூனியை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் அமல், கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நிலையில் நேற்று அவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு எலா, அலெக்சாண்டர் என பெயர் வைத்துள்ளனர் ஜார்ஜ் குளூனி தம்பதியினர்

Leave a Reply