ஹிலாரிக்கே எனது ஓட்டு. முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், எதிர்க்கட்சியான ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவலை ஜனநாயக கட்சியில் இருக்கும் புஷ்ஷின் மருமகள் காத்லீன் தனது ஃபேஸ்புக்கில் உறுதி செய்துள்ளார்.
குடியரசு கட்சியின் பிரமுகரே ஹிலாரிக்கு வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளதால் ஹிலாரியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன