நம்மூரில் பணியில் இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்தால்தான் தண்டிக்கப்படுவார்கள். அதுகூட சம்பளத்தில் பிடித்தம் போன்ற தண்டனைதான் உண்டு. ஆனால் ஜார்ஜியா நாட்டில் துப்புறவு தொழிலாளி ஒருவர் தனது பணியை சீக்கிரம் ஆரம்பித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜார்ஜியா நாட்டை சேர்ந்த கெவின் மெக்கில் என்ற துப்புரவு தொழிலாளி தினமும் காலை 7 மணிக்குள் குப்பைகளை அகற்றும் பணியை முடிக்க வேண்டும். ஆனால் அவர் கடந்த சில நாட்களாக அதிகாலை 5மணிக்குள் அனைத்து குப்பைகளையும் எடுத்துவிட்டு சென்றுள்ளார்.
ஐந்து மணிக்கு மேல் கொட்டப்படும் குப்பைகள் அடுத்த நாள் வரை இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கெவின் கைது செய்யப்பட்டு, அவர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. தனது கடமையை சீக்கிரம் முடித்ததற்கு தண்டனையா? என்று மனம் நொந்து சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் கெவின்.