ஜெர்மனியில் ஐ.எஸ்.தீவிரவாதியின் கண்மூடித்தனமான தாக்குதல். 9 பேர் பரிதாப பலி

ஜெர்மனியில் ஐ.எஸ்.தீவிரவாதியின் கண்மூடித்தனமான தாக்குதல். 9 பேர் பரிதாப பலி

munichசமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் கைவரிசையால் மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ள நிலையில் நேற்று ஜெர்மனியில் தீவிரவாதி ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானதாகவும், மேலும் பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் நகரில் ஒலிம்பியா என்ற ஷாப்பிங் மாலில் நேற்றிரவு நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் 9 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

பின்னர் இந்த தாக்குதலை நடத்திய அந்த மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் தாக்குதலை நடத்திய மர்ம நபர் ஈரான் வம்சாவளியைச் சேர்ந்தவன் என்றும் ஐ.எஸ்.ஐ. தீவிரவாத இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருபவன் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்பட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முனிச் நகரில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply