ஓரினச்சேர்க்கை சட்டம்: அதிபரின் எதிர்ப்பையும் மீறி அமலாகிறதா?

ஓரினச்சேர்க்கை சட்டம்: அதிபரின் எதிர்ப்பையும் மீறி அமலாகிறதா?

ஜெர்மனி நாட்டில் பெண் அதிபராக இருந்து வரும் ஏஞ்சலா மெர்க்கல் ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அனுமதிக்க கூடாது என்று உறுதியாக உள்ளார். ஆனால் அவரையும் மீறி அவருடைய கட்சியினர்களே ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருடைய எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் அமலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் மசோதா இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கும். மேலும் அந்த ஜோடி குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதிக்கும்.

Leave a Reply