ஜெர்மனி அதிபர்அலுவலகம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு

ஜெர்மனி அதிபர் அலுவலகம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு
germany
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அலுவலகத்துக்கு தபால் மூலமாக வந்த சந்தேகத்துக்கிடமான பொருள்கள் வந்தது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பிரதமர் அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியபோது, “பிரதமர் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் வரும் பொருள்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும். அந்த வகையில், நேற்று பரிசோதிக்கப்பட்ட சில தபால் பொருள்கள் சந்தேகத்துக்குரியவையாக இருந்தன. எனவே அவை வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பொருள்களை ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் சந்தேகத்துக்குரிய பொருட்களை தகுந்த பாதுகாப்புகளுடன் ஆய்வு செய்து வருகின்றனர். தபால் மூலம் வந்த அந்த மர்ம பொருட்களில் அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

Chennai Today News; Police seal off Chancellor Merkel’s office over suspicious package

Leave a Reply