மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா? நிரூபணம் செய்த விஞ்ஞானிகள்
ஒரு மனிதனின் மரணத்திற்கு பின்னர் அவனுக்கு வாழ்க்கை உண்டா? இல்லையா? என்பது குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து பலவகையான மதங்கள் பலவகையான கருத்துக்களை கூறி வருகின்றது
இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா?, இல்லையா? என்ற கேள்விக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த டாக்டர்கள் தெளிவான விடை அளித்துள்ளனர்
ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த வியப்பூட்டும் அறிவிப்பு என்பது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக கொண்டவையாகும்
2012 மற்றும் 2016-க்கு இடையில் கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்து கலவைகள் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டது. எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.
அதனைத்தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.
அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அந்த கருவியின் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.
அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.