உலகில் பொதுமக்கள் வாழ தகுதியான நாடு எது? கருத்துக்கணிப்பின் முடிவு
2016ஆம் ஆண்டில் பொதுமக்கள் குடியிருக்க சிறந்த நாடு எது என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பொருளாதார மையம் ஒன்று கடந்த சில நாட்களாக எடுத்து வந்த நிலையில் தற்போது இதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடாக ஜெர்மனி முதல் இடத்தை பெற்றுள்ளது.
மொத்தம் 60 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், வணிகம், வாழ்க்கை தரம், பாரம்பர்யம் மற்றும் பொருளாதார செல்வாக்கு என 24 தகுதிகளை கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த தகவல்களை சேகரிக்க 16,200க்கும் அதிகமான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகள் என்பது குறிப்பிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் வாழத்தகுந்த நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவதாக கனடா, மூன்றாவதாக இங்கிலாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 22-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து போர்ச்சுக்கல், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.