கங்கையை தூய்மைப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஜெர்மனி விருப்பம்
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று கங்கை நதியை தூய்மைப்படுத்துதல் திட்டம். இதற்கென ஒரு தனி அமைச்சகமே தொடங்கி கங்கையை சுத்தப்படுத்துவதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இந்நிலையில் கங்கை நதியை தூய்மைப்படுத்த தங்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் முக்கியமான நதியாக விளங்கி வரும் ரிகைன் என்ற நதியை சுத்தப்படுத்திய அனுபவம் தங்களுக்கு இருப்பதால், இந்தியாவில் உள்ள கங்கையை தூய்மைப்படுத்தும் பணியை தங்களால் சிறப்புற செய்து முடிக்க முடியும் என்றும் அதற்கான வாய்ப்பை தங்களுக்கு அளிக்க வேண்டும் என ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த விருப்பத்தை தற்போது ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் ஜெர்மனி முன்வைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெர்லினின் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பேசியபோது, “இந்தியாவில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் கங்கையை தூய்மையாக்கும் திட்டம், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரும் தூய்மை பள்ளி திட்டம் ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜெர்மனி ஆர்வம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் பிராங் வால்டர் என்னிடம் பேசினார். இதுகுறித்து பிரதமரிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்/.