ஃபேஸ்புக், டுவிட்டருக்கு 5 கோடி யூரோ அபராதம். எதற்கு தெரியுமா?
சட்டவிரோதமான பதிவுகளை தடுக்காத ஃபேஸ்புக், டுவிட்டர் மீது ஜெர்மனியின் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் பாய்ந்துள்ளது.
ஜெர்மனியில் அகதிகள் மீது இனவெறியை தூண்டும் விதத்தில், ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவிடுவதையும், அதை பகிர்வதையும் தடுக்க அந்நாட்டு அரசு வலியுறூத்தியது.
அகதிகளாக வரும் நபர்கள் மீது வன்முறையை தூண்டுவது போலவும்,மத வெறியை தூண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக பதிவிடப்படும் நபர்களின் பதிவுகளையோ, கணக்குகளை முடக்க ஜெர்மனி அரசு தெரிவித்திருந்தது.
இதை 24 மணி நேரத்தில் செய்யாவிட்டால் ஃபேஸ்புக், டுவிட்டர் மீது 5 கோடி யூரோ அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.