சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி இளம்பெண் பாலியல் பலாத்காரம்

சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி இளம்பெண் பாலியல் பலாத்காரம்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு சுற்றுலா வந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்று மாமல்லபுரம். இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த குழு ஒன்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். அதில் ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திலும், இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகத்திலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியதை அடுத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

இதன்பயனாக ஜெர்மனி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட ஜெர்மனி பெண் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இன்று நாடு திரும்புவதாக ஜெர்மனி தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply