இன்று முதல் பெட்ரோல் பங்க் பி.ஓ.எஸ் மெஷின்களிலும் பணம் கிடைக்கும்.

இன்று முதல் பெட்ரோல் பங்க் பி.ஓ.எஸ் மெஷின்களிலும் பணம் கிடைக்கும்.

1செல்லாது என்று பிரதமரால் கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற தினமும் வங்கியின் வாசல்கள் பொதுமக்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் இனி வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மட்டுமின்றி பெட்ரோல் பங்க் பங்க் பி.ஓ.எஸ் மெஷின்களிலும் பணம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் டெபிட் கார்டு வைத்துள்ளவர்கள் தங்கள் கார்டை தேய்த்து நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை பெற்று கொள்ளலாம். முதல்கட்டமாக இந்த வசதி எஸ்பிஐ வங்கியின் POS கருவிகள் மூலம், 2,500 பெட்ரோல் ’பங்க்’களில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் விரைவில் HDFC Bank, CitiBank, ICICI ஆகிய வங்கிகளின் POS Machines மூலம் 20,000 ’பங்க்’களில் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பு காரணமாக இனிவரும் நாட்களில் வங்கியில் கூட்டம் குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply