சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்களின் கவனத்திற்கு..

000578-2921829

பொதுவாக ஒரு பெண் தாய்மை என்ற அந்தஸ்தை அடையும் போது தான் முழுமை பெறுகிறாள். குழந்தை ஒன்று வந்த பின் தான் அவர்களின் வாழ்க்கை அர்த்தம் பெற்று அழகாக மாறுகிறது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வது லேசுபட்ட காரியம் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு பிள்ளையை பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மமாகவே விளங்குகிறது. அதற்கு காரணம் பிரசவமே. ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போதெல்லாம் சிசேரியன் (அறுவை சிகிச்சை) மூலமாக தான் குழந்தை பல பேருக்கு குழந்தை பிறக்கிறது.

சுகப்பிரசவம் ஆன பெண்கள் குழந்தை பெற்ற 3 நாட்களில் எல்லாம் வீட்டிற்கு சென்று விடுவார்கள். அதற்கு பிறகும் அவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க மாட்டார்கள். ஆனால் சிசேரியன் நடந்த பெண்களின் நிலையோ தலைகீழ். சிசேரியன் முறைப்படி நடந்த பிரசவத்தின் தாக்கங்கள் ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும்.

அதே போல் குணமாகும் காலமும் ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும். உங்களுக்கு சிசேரியன் முறைப்படி குழந்தை பிறந்திருந்தால், நீங்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை கீழே விளக்கியுள்ளோம்.

வலி நீக்கிகள்

உங்களுக்கு சரியான வலி நீக்கிகள் கொடுக்கப்படவில்லை என்றால், சிசேரியன் முறைப்படி நடந்த பிரசவம் வலியை உண்டாக்கும். ஒரு வேளை, உங்களுக்கு அது கொடுக்கப்படவில்லையெனில், கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆடைகள்

அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், நீங்கள் அணியும் ஆடைகள், உங்கள் உடலில் புண் இருக்கும் பகுதிகளில் அழுத்தாமல் இருக்க வேண்டும். அதற்கு சரியான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.

எபிட்யூரல்

எபிட்யூரல் நடந்த பிறகு, எப்படி நடமாட்டத்தை தொடங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள நர்ஸின் உதவியை நாடிடுங்கள். மேலும், இருமல், தும்மல் போன்றவைகள் வரும் போது, அதிக வலி ஏற்படாமல் இருக்க, அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் கைகளை எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றியும் கற்றுக் கொடுப்பார்கள்.

நடைப்பயிற்சி

நடை கொடுப்பது சிரமமாகத் தான் இருக்கும். மெதுவாக உந்தி நடந்தாலும் கூட, முயற்சி செய்து நடையை தொடருங்கள். எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ, அதற்கேற்ப உங்களின் இரத்த ஓட்டமும் சுலபமாக இருக்கும். அதனால் அறுவை சிகிச்சை நடந்த பகுதிகளில் இரத்தம் உறைவது தடுக்கப்படும்

தாய்ப்பால் கொடுத்தல்

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் தாய்ப்பால் கொடுக்க தொடங்குங்கள். இதனால் உங்கள் கர்ப்பப்பை சுருங்குவதற்கு உதவியாக இருக்கும். சிசேரியன் முறைப்படி பிரசவித்தவர்கள், குழந்தைக்கு பால் கொடுக்க, ஓரமாக படுத்தபடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் முட்டுக்கொடுத்து உட்கார்ந்து, நர்சிங் குஷனை பயன்படுத்தி கொடுக்கலாம். செவிலியரின் உதவியை கேளுங்கள், முக்கியமாக, பால் கொடுப்பது முதல் முறை என்றால்.

உடலுறவு

அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே உடலுறவில் ஈடுபட துடிக்காதீர்கள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதற்கு நீங்கள் தயாரான பின்பே, உடலுறவில் ஈடுபடுங்கள். உங்கள் கணவனிடம் அதனை பற்றி நன்றாக பேசி விடுங்கள்.

பெல்ட்

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, உங்கள் வயிற்றை சுற்றி சிசேரியன் பெல்ட் ஒன்றை சில மாதங்களுக்கு அணிவித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அசைவு கொடுப்பதால் உங்கள் தழும்பு திடீரென கிழியாமல் தடுக்க இந்த பெல்ட் பாதுகாப்பை அளிக்கும். அதே போல், அறுவை சிகிச்சைக்கு பின், உங்கள் வயிற்றில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும் இது உதவி செய்கிறது.

கனமானதை தூக்க வேண்டாம்

குணமடைய 6 வாரங்களாவது ஆகும். இந்த கால கட்டத்தில் கனமான எந்த பொருளையும் தூக்காதவாரு பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் கடினமான வீட்டு வேலைகளையும் செய்யக் கூடாது. இது தையல் போட்ட இடத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். * உங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தால், கூடுதல் உதவியை பெறுவது நல்லது. அதற்கு காரணம், குழந்தையை தூக்கினால் கூட தையல் பிரியும் அபாயம் ஏற்படும்.

உடற்பயிற்சி

உங்கள் தோற்றம் மாறுபட்டு இருப்பது இயல்பு தான். ஆனால் மீண்டும் பழைய தோற்றத்தை உடற்பயிற்சியின் மூலம் பெற்று விடலாம். ஆனால் அதற்காக உடனே ஜிம்மிற்கு கிளம்பி விடாதீர்கள். முதலில் எளிய உடற்பயிற்சிகளில் இருந்து ஆரம்பியுங்கள். உதாரணத்திற்கு, கால் தரையில் படும் படி, மெதுவாக ஊஞ்சலாடுவது.

உணவு

அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்கு பிசுபிசுவென இருக்கும் திடமான உணவுகளையும், கார்பனேட்டட் உணவுகளையும் தவிர்க்கவும். இதனால் உங்கள் உறுப்புகள் இன்னமும் மென்மையாக, ஆறிக் கொண்டிருக்கும்.

வாகனம் ஓட்டுதல்

வாகனம் ஓட்டுவதற்கு நீங்கள் 6 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வயிற்றில் வலி லேசாக இருந்தாலும் கூட, உங்களால் வாகனத்தை ஓட்ட முடியாது. அதே போல், வண்டி ஓட்டும் போது ஏற்படும் திடீர் அதிர்வும், பிரேக் பிடித்தலும், உங்களுக்கு காயங்களை ஏற்படுத்தி விடும். அதனால் வண்டி ஓட்டுவதற்கு முன்பு மருத்துவரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்

சிசேரியன் நடந்த பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு தான். அப்படி உளைச்சல் ஏற்படும் போது, மருத்துவர் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். இவ்வகையான உணர்வுகளை எண்ணி வெட்கப்பட எதுவுமே இல்லை. கடைசியாக, முதல் குழந்தை சிசேரியன் மூலமாக பிறந்தால், இரண்டாவது குழந்தைக்கு சுகப்பிரசவம் ஆகாது என்பதெல்லாம் உண்மையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் எப்படி பிரசவம் நடக்கும் என்பதை பற்றி மருத்துவரிடம் பேசுங்கள்.

Leave a Reply