[carousel ids=”37576,37577,37578,37579,37580,37581″]
ரஷ்யாவை அடுத்த செர்பியா நாட்டின் யாமல் என்ற தீபகற்ப பகுதியில் திடீரென மாபெரும் பள்ளம் தோன்றியுள்ளதால் அப்பகுதியினர்களும், விஞ்ஞானிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஷ்யா – செர்பியா எல்லையில் உள்ள யாமல் என்ற தீபகற்ப பகுதி உலகத்தின் முடிவு (End of the World) என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த வாரம் 80 மீட்டர் அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளம் தானாகவேதோன்றியுள்ளது. இதன் ஆழம் எவ்வளவு என்பதே தெரியவில்லை. இந்த பள்ளத்தின் ஆழத்தை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த பள்ளம் உண்டானதன் பின்னணி என்ன என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலகத்தின் முடிவு என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் எதன் அறிகுறி என்று மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.