24 வருடங்களுக்குப் பின்னர் பெர்லின் நகரில் தோண்டி எடுக்கப்பட்ட லெனின் தலை சிலை
[carousel ids=”71518,71519,71520″]
ஜெர்மனியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்ய தலைவர் லெனின் சிலையின் தலைப் பகுதி தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
பெர்லின் நகருக்கு வெளியில் உள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கிரானைட்டில் செய்யப்பட்டிருந்த லெனின் சிலையை தோண்டி எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களும், தொல்பொருள் ஆய்வாளர்களும் கடந்ஹ சில வருடங்களாக குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பெர்லின் நகரின் கிழக்குப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பிரம்மாண்டமான லெனின் சிலையின் தலை இது. இந்தச் சிலை ஒட்டுமொத்தமாக 19 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்தது. பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட பிறகு, 1991ல் இந்தச் சிலை துண்டாக்கப்பட்டு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டது. கிழக்கு – மேற்கு ஜெர்மனிகள் இணைக்கப்பட்டதைப் பற்றிய திரைப்படமான “குட் பை லெனின்” படத்தில் இந்தச் சிலையும் இடம்பெறும். ஹெலிகாப்டர் மூலம் இந்தச் சிலை தூக்கிச்செல்லப்படும் காட்சியும் படத்தில் இடம்பெற்றிருந்தது.
3.5 டன் எடையுள்ள இந்தத் சிலை காட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஸ்பனடாவ் சிட்டாடெல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. புதைக்கப்பட்ட சிலையின் பகுதிகளில், தலை மட்டுமே தோண்டியெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.