அல்பேனியா தொலைக்காட்சியில் ஒரே நிமிடத்தில் வேலை பெற்ற 21 வயது பெண்
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு செய்தி வாசிக்க ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பல கட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட இந்த ஆடிஷனில், 21 வயது பெண் ஒருவர் முதல்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பணியாணை வழங்கப்பட்டது. அவருடைய தேர்வு பலருக்கு ஆச்சரியத்தை அளித்த நிலையில் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரே காரணம் ஆடிஷன் தினத்தன்று அவர் அணிந்து வந்த உடைதான் என்று கூறப்படுகிறது. மேலே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு இது தெளிவாக புரியும்.
அல்பேனியா நாட்டின் தொலைக்காட்சி இண்டர்வியூவுக்கு வந்த Enki Bracaj என்ற 21 வயது பெண், தேர்வாளர்கள் முன் அமர்ந்து செய்திகளை வாசிக்க தொடங்கிய ஒருசில நிமிடங்களில் அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவர் செய்தியை சுமாராகத்தான் வாசிக்கின்றார் என்றாலும், அவர் அணிந்திருந்த உடை, அவர் வாசிக்கும் பாணி ஆகியவை தங்களை கவர்ந்ததாகவும், அதனால்தான் அவரை உடனடியாக தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது அவர் அல்பேனியா தொலைக்காட்சியில் உலகச்செய்திகள் வாசிக்கும் பிரிவில் பணிபுரிகிறார். இந்த தொலைக்காட்சியில் பணியில் சேர பலகட்ட இண்டர்வியூவுக்கு பின்னர் வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.