[carousel ids=”33889,33890,33891,33892,33893,33894,33895,33896,33897,33898,33899,33900,33901,33902,33903,33904,33905″]
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் இன்று தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அவரது தந்தை ஒரு வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அது என்ன தெரியுமா? அந்த பெண்ணின் புகைப்படம்தான். புகைப்படத்தின் என்ன வித்தியாசம் என்று கேட்பர்வகளுக்கான பதில் என்ன தெரியுமா? அந்த பெண் பிறந்தது முதல் இன்று வரை தினசரி ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் தொகுப்புதான் அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்ட ஆல்பம்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Gillingham, Kent, என்ற இடத்தில் வாழும் 18 வயது இளம்பெண் Suman Bansal. இவர் பிறந்த முதல் நாள் அன்று இவரை புகைப்படம் எடுக்கத்தொடங்கிய இவரது தந்தை Munish, அன்று முதல் தினந்தோறும் தனது மகளை போட்டோ எடுத்டு அந்த போட்டோக்களை ஜாக்கிரதையாக ஆல்பத்தில் போட்டு வந்துள்ளார். அவர் எடுத்த மொத்த போட்டோக்களின் எண்ணிக்கை 365 X 18 = 6570 ஆகும். இந்த போட்டோக்கள் அனைத்தையும் Munish தனது அன்பு மகளின் 18 வது பிறந்தநாளான இன்று பரிசாக அளிக்கவுள்ளார்.
இந்த புகைப்படங்களின் தொகுப்பு தற்போது யூடியூப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1sxQwYl” standard=”http://www.youtube.com/v/kiYQbL0Kb1Q?fs=1″ vars=”ytid=kiYQbL0Kb1Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3738″ /]