தினசரி 8000 முறை தும்மும் 11 வயது இங்கிலாந்து சிறுமி

தினசரி 8000 முறை தும்மும் 11 வயது இங்கிலாந்து சிறுமி

sneezeஜலதோஷம் பிடித்தால் அவ்வப்போது தும்மல் வந்து சிரமப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கிலாந்து நாட்டில் உள்ள 11 வயது சிறுமி தொடர்ச்சியாக தும்மிக்கொண்டிருக்கும் வியாதியில் அவதிப்படுவதாகவும், நிமிடத்திற்கு 10 முறையும், நாள் ஒன்றுக்கு 8000 முறையும் அந்த சிறுமி தும்மிக்கொண்டே இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் தும்மாத ஒரே நேரம் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வடக்கு Colchester என்ற பகுதியை சேர்ந்த Ira Saxena என்ற சிறுமிக்குத்தான் இந்த விநோத வியாதி வந்துள்ளது. தொடர்ச்சியாக வரும் தும்மல் காரணமாக அவர் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டார். இருப்பினும் அவரது பள்ளி நிர்வாகிகள் அவரை தொடர்ந்து தேர்வு எழுத அனுமதித்து வருகின்றனர். இந்த தும்மலுக்கு காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டு லாரன் ஜான்சன் என்ற 12 வயது சிறுவனுக்கும், கடந்த ஆண்டு டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த கேட்டிலியன் என்பவருக்கும் இதே பிரச்சனை இருந்ததாகவும், இவர்கள் இருவருக்கும் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply