இன்று முதல் கூடுதல் திரையரங்குகளில் ‘மாலை நேரத்து மயக்கம்’
செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படம் நேற்று எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி முதல் காட்சி முடிந்தவுடனே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் காட்சி முடிந்த அரை மணி நேரத்தில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியானதால் அடுத்தடுத்த காட்சிகளில் கூட்டம் இந்த படத்திற்கு அதிகரித்தது.
சென்சார் போர்டு இந்த படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற கொடுத்திருந்தபோதிலும், இளைஞர்களையும், காதலர்களையும் கவரும் வகையியில் படம் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. செல்வராகவனின் அழுத்தமான கதை, ஆழமான வசனங்கள். சிறப்பான பின்னணி இசை ஆகியவற்றால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே 225 திரையரங்குகளில் ரிலீசான இந்த படம் இன்று முதல் தமிழகம் முழுவதும் மேலும் 25 திரையரங்குகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்ப பெற்றுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோ பாலகிருஷ்ணனின் தந்தைதான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: Gitanjali Selva’s Maalai Nerathu Mayakkam Screens Increases from today