சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த சிறப்புப்பயிற்சியை துவக்கி வைத்து பேசிய குளோபல் மருத்துவமனை அவசர சிகிச்சைத் துறைச் சலைவர் டாக்டர் கே.ஆர்.ராம்மோகன் அவர்கள், “சாலை விபத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு பொதுமக்களை விட வாகன ஓட்டிகள்தான் பெருமளவு உபயோகமாக இருப்பார்கள். விபத்தில் காயமடைந்தவர்களை மனிதாபமான எண்ணத்தோடு ஓட்டுனர்கள் உதவி செய்ய முன்வரவேண்டும். விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திராமல் ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சாலை விபத்துகளில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு உதவி புரியும் பொதுமக்களுக்கு காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் சிரமம் ஏற்படுத்தக்கூடாது என்று நீதிமன்றங்கள் அதிரடியாக அறிவுறுத்தியுள்ளதால் விபத்தில் சிக்கியவர்களுக்குத் தயக்கம் இல்லாமல் ஓட்டுனர்கள் உதவ முன்வர வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சிறப்பு பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.