தமாகவில் இருந்து ஞானசேகரன் திடீர் நீக்கம். ஜி.கே.வாசன் அதிரடி
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. படுதோல்வி அடைந்ததால் கட்சியின் தலைமை எடுத்த முடிவு குறித்து ஒருசில தலைவர்கள் நேரடியாக விமர்சனம் செய்தனர். இவர்களில் கட்சியின் துணைத்தலைவர் ஞானசேகரனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஞானசேகரன் நேற்று இரவு திடீரென விடுவிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி வேலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாச காந்தியும் விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை இக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கையெழுத்திட்டார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இருவரும் செயல்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமாகவினர் கூறிவருகின்றனர்.