அக்குள் கருமையை போக்கும் பழங்கள்

0365344c-137f-4a57-a62e-f878c80ea8df_S_secvpf

சிலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். இதனால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியாமல் கவலைப்படுவார்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே அக்குள் கருமையை எளிதில் போக்கலாம்.

• எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அக்குளில் மசாஜ் செய்து உலர வைக்க வேண்டும். பின் மீண்டும் இச்செயலை செய்து உலர்ந்ததும், குளிர்ந்த நீரின் மூலம் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் அக்குள் கருமையைப் போக்கலாம்.

• வெள்ளரிக்காய் ப்ளீச்சிங் தன்மையையும் கொண்டது. அதற்கு வெள்ளரிக்காயைக் கொண்டு அக்குளை மசாஜ் செய்து உலர்ந்ததும், தயிரைத் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், அக்குள் கருமையை விரைவில் போக்கலாம்.

• ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஆரஞ்சு பொடியை எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 15 நிமிடம் உலர வைத்து கழுவ, அக்குள் கருமை நீங்கும்.

– இப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு அக்குளைப் பராமரித்த பின், அக்குளில் டியோடரண்ட் அல்லது பெர்ஃப்யூம் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான நீரில் நல்ல குளியலை மேற்கொண்டு, அக்குளை இறுக்காத அளவில் தளர்வான உடைகளை அணிய வேண்டும்.

Leave a Reply