கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக் மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ள்லார். இந்த விரிவாக்கத்தின்போது கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், அவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி கொடுக்க மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை நேற்று புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மனோகர் பாரிக்கர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் இன்று மோடியையும் சந்திக்கவுள்ளார்.
தற்போது மத்திய நிதி அமைச்சர் அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லிதான், கூடுதலாக பாதுகாப்புத் துறையைஅமைச்சகத்தையும் கவனித்து வருவதால் அவருடைய வேலைப்பளுவை குறைக்க பாதுகாப்பு துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததா என்ற செய்தியாளரின் கேள்விக்கு மனோகர் பாரிக்கர் பதிலளிக்கையில், “பிரதமரைச் சந்தித்த பிறகுதான் இதுதொடர்பாக நான் பதிலளிக்க முடியும்’ என்றார்.