பாஜக தலைமைக்கு கோவா துணை முதல்வர் மிரட்டல். பெரும் பரபரப்பு

Francis-DSouza-கோவாவின் புதிய முதல்வராக தன்னை தேர்வு செய்‌யாவிட்டால் பதவி விலகப்போவதாக துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோஸா மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சராக பதவியேற்க இருப்பதை ஒட்டி புதிய முதல்வரை தேர்வு செய்ய கோவா பா.ஜனதா சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று மாலை கூடுகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர், சபாநாயகர் ராஜேந்திர அர்லேகர் ஆகியோரது பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டு வரும் நிலையில்., தனக்கு முதல்வர் பதவி வழங்காவிட்டால், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பிரான்சிஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படவேண்டும். இல்லையெனில் அதற்குண்டான விலையை பா.ஜனதா கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பிரான்சிஸ் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சிஸ் டிசோஸாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பதால், புதிய முதல்வரை தேர்வு செய்வது கோவா மாநில பா.ஜனதாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Leave a Reply