போலீசை வாளால் மிரட்டிய பெண் சாமியார்: போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

போலீசை வாளால் மிரட்டிய பெண் சாமியார்: போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நான்கு பேர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் 50 பேர்களை கூட்டம் கூட்டி பெண் சாமியார் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இந்த பிரார்த்தனை நடைபெறுவதை அறிந்த போலீசார் அங்கு சென்று அதிரடியாக பக்தர்களை தடியடி நடத்தி கலைத்தனர்

இதனால் ஆவேசம் அடைந்த பெண் சாமியார் வாளை எடுத்து போலீஸாரை மிரட்டினார். இதனையடுத்து அந்த பெண் சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply