பிரின்ஸ் ஜுவல்லரி வெளியிடும் அன்னை தெரசா உருவம் பதித்த தங்க டாலர்.

பிரின்ஸ் ஜுவல்லரி வெளியிடும் அன்னை தெரசா உருவம் பதித்த தங்க டாலர்.

terasaபிரபல சமூக சேவகி அன்னை தெரசாவுக்கு நாளை புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. வாடிகனின் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டத்தை போப் அறிவிக்கின்றார். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மம்தா பானர்ஜி உள்பட பலர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதை அடுத்து அவரது உருவம் பதித்த தங்க டாலர்களை பிரின்ஸ் ஜுவல்லரி இன்று வெளியிடுகிறது.. ஒரு கிராம், 2 கிராம், 4 கிராம் எடையில் 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த தங்க டாலர் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை தொண்டு அமைப்புகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரின்ஸ் ஜுவல்லரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரின்சிசன் ஜோஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

தேசிய கத்தோலிக்க மாநாடு 1993-ம் ஆண்டு லயோலா கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அருட்தந்தை தம்புராஜுடன் இணைந்து நான் செய்திருந்தேன். அந்த மாநாட்டில் அன்னையுடனான நிகழ்வுகள் என வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாகும்.

அன்னை தெரசா போன்ற புனிதரிடமிருந்து வாழ்த்து பெறும் பாக்கியம் கிடைத்தது. கொல்கத்தாவில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிஸ் அமைப்புக்கு அடிக்கடி சென்று அவரை சந்தித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரின்சிசன் ஜோஸ் மகன் ஜோசப் பிரின்ஸ் கூறும்போது, “எனது தந்தையுடன் சென்று அன்னையை சந்தித்து ஆசி பெற்றபோது எனக்கு 5 வயது. அவரை சந்தித்து ஆசி பெற்றதை இப்போது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply