அமெரிக்காவில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால் உலகின் அனைத்து பங்கு வர்த்தகங்களிலும் தங்கத்தின் விலையில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2013 டிசம்பர் மாதத்தில் மிகக்குறைவான விலையை தங்கம் அடைந்தது. மீண்டும் அதே விலையை எட்டிப்பிடிக்கும் என கூறப்படுகிறது.
கடந்த டிசம்பரில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1180 என்ற விலையில் படுமோசமாக வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை ஏறி, கடந்த மாதம் $1275 வரை வந்தது. தற்போது தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேல் விலை வீழ்ச்சி அடைந்து தற்போது $1214 என்ற நிலையில் இருக்கின்றது. இன்னும் தங்கத்தின் விலை இறங்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் சவரனுக்கு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் தங்கம், சவரனுக்கு இன்று 96 ரூபாய் குறைந்து 19,992 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.12 குறைந்து 2,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.13 குறைந்து 2,673 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு 655 ரூபாய் குறைந்து 38,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 41.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.