எண்ணங்களுக்கு ஏற்ற உணவுகள்!

மனிதர்களின் குணாதிசயங்களாக இருக்கும் எண்ணங்கள் தான் அவர்களின் உணர்வுகளையும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகளையும் வெளிப்படுத்துகின்றன.

உணவுகளின் மூலமாக எண்ணங்கள் பெரிதளவு மாற்றம் பெறுகின்றன. சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உற்சாகம் அதிகரிக்கும். அதே போல வேறு சில சிறந்த உணவுகள் நம்மை சிறப்பாக சிந்திக்க வைக்கும்.

இவை நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் கொண்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மகிழ்ச்சியுடனும் மற்றும் களிப்புடனும் வாழ முடியும்.

டார்க் சொக்லெட்
சிறந்த எண்ணங்களுக்கு டார்க் சொக்லேட்கள் உதவுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, நல்லெண்ணங்களை உருவாக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும் தன்மையை கொண்டவையாக இவை உள்ளன. இந்த அருமையான சொக்லேட் சுவையாகவும், தடையற்ற நல்லெண்ணங்களின் தூண்டுகோலாகவும் இருக்கிறது.

கார்போஹைட்ரேட்ஸ்
ஒவ்வொரு நாளும் சரிவிகித அளவில் கார்போஹைட்ரேட்களை சாப்பிடுவதன் மூலம் பெருமளவு மன அழுத்தங்களை குறைக்கவும் மற்றும் நல்லெண்ணங்களைப் பெறவும் முடியும். நம்மை மகிழ்ச்சியாகவும் மற்றும் உற்சாகமாகவும் வைத்திருப்பதுடன், உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் அற்புத உணவாக கார்போஹைட்ரேட்கள் உள்ளன.

இனிப்புகள்
ஜாம்கள், கேக்குகள் மற்றும் பிற பேக்கரி பண்டங்களை சுவைத்து பார்ப்பதும் கூட எண்ணங்களை செம்மைப்படுத்த உதவுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் உங்கள் எண்ணங்களை சிறக்கச் செய்யவும் இனிப்புகளை சாப்பிடுவது இன்றியமையாத செயலாகும். இனிப்பான உணவுகள் சிறப்பான எண்ணங்களின் தூதுவர்களாக உள்ளன.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
தானிங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முழு உணவுப் பொருட்கள் உங்கள் எண்ணங்களை தூண்டவும் மற்றும் அழுத்தம் தரும் ஹார்மோன்களை குறைக்கவும் செய்து, இதமான அனுபவத்தைத் தருகின்றன. தினசரி உணவில் இந்த முழு உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்பவர்கள் குறைந்த மன அழுத்தம் கொண்டவர்களாகவும், எண்ணங்கள் தொடர்பான பிரச்னைகள் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.

இதர உணவுகள்
மீன்கள் மற்றும் இறைச்சி ரொட்டி ஆகிய உணவுகளும் எண்ணங்களைத் தூண்டும் சிறந்த உணவுகளாகும். அவை எண்ணங்களை மேம்படுத்தவும் மற்றும் இதமான உணர்வையும் தர முனைகின்றன.

Leave a Reply