எஸ்பிஐ வங்கி அசத்தலான புதிய திட்டத்தின் படி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், பிற விடுமுறை தினங்களிலும் அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான இலவச உதவி எண்களை எஸ்பிஐ அறிவித்துள்ளது. 1800 1234 அல்லது 1800 2100 என்ற இந்த இலவச உதவி எண்கள் மூலம்,
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 44 கோடி வாடிக்கையாளர்களும், வீட்டிலிருந்தே அதுவும் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட வங்கிச் சேவையை பெற முடியும்.
பல சேவைகளை இனி வீட்டிலிருந்த படியே விடுமுறை தினங்களிலும் பெற முடியும் என்கிற அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.